சனி, 19 ஜனவரி, 2013

கருணாநிதியின் முடிவு

              என்னை போன்ற 90 களின் தலைமுறைகளுக்கு இவரை பற்றிய ஆரம்ப கால வரலாற்றை பற்றி நேரடியான அறிமுகம் இல்லை . ஆனால் இவரை பற்றி படித்தவரையில் ஆரம்ப காலங்களில் இவர் இப்போதைவிட சற்று சிறப்பாகவே செயல்பட்டு இருக்கிறார் .அண்ணா மறைவுக்கு பிறகு ஏற்பட்ட குழப்பத்தில் எம்ஜியார்  துணையுடன் நெடுசெழியனை   பின்னுக்கு  தள்ளி தலைவர் பதவியை  கைப்பற்றி இருக்கிறார் . இதுதான் இவருடைய முதல் ராஜதந்திர வெற்றி . பி ன்பு யார் துணையுடன்  தலைவர் பதவிக்கு வந்தாரோ அவரையே கட்சியை விட்டு நீக்கியிருக்கிறார் . இதுதான் அவர் வாழ்வில் செய்த முதல் தவறு . எம்ஜியார் கேட்ட ஒரே ஒரு அமைச்சர் பதவியை தந்திரு தால் திமுகவின் வரலாறே மாறியிருக்கும் .ம்  காலம்  செய்த கோலம் எம்ஜியாரிடம்   ஆட்சியை 13 வருடங்கள் பறி கொடுத்து விட்டு  வீட்டில் இருந்து ஏங்கி இருக்கிறார் . இந்த காலகட்டதில் இவருடைய அரசியல் செயல்பாடுகள் நன்றாகவே இருந்து இருக்கின்றன .  இலங்கை விஷயத் தில் ஓர் அளவுக்கு அக்கறை காட்டி இருக்கிறார் . மிசாவில் இவரும் முக ஸ்டாலினும் நிறைய அடி பட்டார்கள் .ஆனாலும் ஆட்சியை பிடிக்க முடியவில்லை .இந்த காலகட்ட களில் ஸ்டாலினை ஓர் அளவு கட்சியில் நிலை நிறுத்தி இருக்கிறார் . பின்பு எம்ஜியார் மறைவுக்கு பிறகு ஆதிமுகவில் ஏற்பட்ட குழப்பத்தில் ஆட்சியை பிடித்திருக்கிறார் . ஏதோ இன்று இருக்கும் திமுக போல மத்திய அரசுக்கு ஜால்ரா அடிக்காததால் அன்றைய  அரசு கவிழ்கபட்டது . பின்பு நடத்த தேர்தலில் ராஜீவ் காந்தி படுகொலையால் ஏற்பட்ட அனுதாபத்தில் ஆதிமுக ஆட்சியை பிடித்தது . ஜெயலலலிதா  அவருடைய அரசியல் எதிரி  ஆனது காலத்தின்  கோலம் தான் .இந்த தேர்தலுக்கு பிறகு கட்சியிலும் பெரும் குழப்பம் ஏற்பட்டது . எங்கே மகனுக்கு போட்டியாக வந்து விடுவரோ என்று வைகோவை கட்சியில் இருந்து வெளிஏற்றினர் .பிறகு அம்மையார் புரிந்த அற்புத ஆட்சியில் மகிழ்த மக்கள் மீண்டும் ஆட்சியை இவரிடமே அளித்தனர் .   அதன்  பிறகு மக்கள் மாறிமாறி இவர்களிடம் படாதபாடு படுகிறார்கள் . ஆனால் இவர் ஆண்ட கடைசி ஆட்சியில் தான் இவருக்கு அழிக்க முடியாத அவப்பெயர் ஏற்பட்டது .இலங்கை படுகொலையில் இவர் அடித்த உண்ணாவிரத நாடகம் குழந்தைகள் கூட  சிரிக்கும் காமெடி  நாடகம் ஆனது .   இன்று வாழ்வின் இறுதியில் இருக்கும் இவருக்கு தன் குடும்பத்துள் நடக்கும் சண்டை  நிச்சயம் தீராத தலைவலிதான்     . இவருக்கு பிறகு திமுக நிச்சயம் உடையும் . இது அவருக்கும் தெரியும் .உண்மையிலேயே இவரை ஒரு விஷயத் திற்காக  பாராட்டலாம் .இவர் ஆரம்பத்திலேயே மக்களுக்காக தான் பாடுபடுவேன் என்றார் . ஜனங்க தான்  தப்பா நினைச்சிகிட்டாங்க .அவருடைய மக்களுக்காக  பாடுபட்டு இருக்கிறார் .கருணாநிதியின்  முடிவு படி தற்போது ஸ்டாலின் அடுத்த தலைவராக முன் மொழிய பட்டு இருக்கிறார் . ஆனால் அஞ்சாநெஞ்சன்  இருக்கிறார் .ஸ்பெக்ட்ரம் புகழ் கனிமொழி இருக்கிறார் . கேடி பிரதர்ஸ்   இருகிறார்கள் . பொறுத்திருந்து பார்போம் .

வெள்ளி, 18 ஜனவரி, 2013

திரை விமர்சனம் அலெக்ஸ பாண்டியன்

பதிவுலகத்திற்கு வணக்கம் . சுராஜ்  இயக்கத்தில் வெளி வந்திருக்கும் படம் .கார்த்தி எந்த தைரியத்தில் நடிக்க முன் வந்தார் என்று தெரியவில்லை . ஏதோ பெரிய ஹீரோ , ஹீரோயின்  கால்ஷிட் கிடைத்தால்  போதும் என்று  இயக்குனர் நினைத்து விட்டார் . கதை

 என்ற ஒன்றை எப்படி தேடினாலும் கிடைக்கவில்லை .சந்தானம் மட்டும் இல்லை என்றால் அவ்வளவுதான் . எதோ கொடுத்த காசுக்கு அவர்தான் அறுதல் .அதுவும் இரட்டை அர்த்த வசனங்கள் . கார்த்தியின் படங்களில் மோசமான படம் இதுதான்.

அறிமுகம்

வணக்கம் என் பெயர் ராகுல் . மிக நீண்ட நாளாக பதிவுலகை கவனித்து வருகிறேன் .  இந்த சமுதாயத்தில் நடைபெறும் நிகழ்வுகளின் பாதிப்புகளை எனது பார்வை கோணத்தில் இருந்து எழுதுகிறேன் . நன்றி